Loading Events

« All Events

  • This event has passed.

திருக்குறள் சங்கம்

October 22 @ 9:00 am - 5:00 pm

எஸ்.பி.ஓ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி, சென்னை -101.

        திருக்குறள் முற்றோதல் பயணம்

              எஸ். பி ஓ ஏ பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் திரு. A. செந்தில் ரமேஷ் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் பள்ளி முதல்வர் திருமதி எம். வி. மகாலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பள்ளியின் தமிழ்த்துறை திருக்குறள் சங்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.17.06.2026 அன்று தொடங்கிய சங்கத்தின் முக்கிய நோக்கம் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் 1330 குறட்பாக்களையும் “முற்றோதல்” செய்வது!! மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் மதிய இடைவேளையில் தமிழாசிரியர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு நாளும் ஒப்பிக்கின்றனர். அதன்படி 22/7/26 அன்று இறைவழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர் சிலர் ஐந்து அதிகாரங்களை (50 குறட்பாக்கள்) மனனம் செய்து  ஒப்பித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 8/10/26 அன்று இறைவழிபாட்டுக் கூட்டத்தில் கவின்மொழி (8C), மிஷிதா(8I),  ரேஷ்மி(8F) ,  ரிஷிகா(9C) ,

ரூபன் சர்வேஷ்(9F) ஆகிய ஐவரும் ஆறிலிருந்து பத்து அதிகாரங்கள்  ஒப்பித்தனர். 

தமிழ்த்துறையின் சாதனைப் பயணத்தில் என்றும் நினைவுகூரப்படும் மைல்கல்லாக இப்பணி அமைந்துள்ளது .

                     

You tube link :

https://youtu.be/4rvoL_iYA3U

Details

  • Date: October 22
  • Time:
    9:00 am - 5:00 pm
  • Event Category: